/* */

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு

குரூப் 2 பதவிகளுக்கு இனி நேர்முகத் தேர்வு இல்லை எனவும், முதல்நிலை, முதன்மைத் தேர்வு என புதிய முறையில் தேர்வு நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

HIGHLIGHTS

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு முறையில் மாற்றம்: ராமதாஸ் வரவேற்பு
X

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) இந்த ஆண்டு 2024ல் நடைபெறும் தேர்வுகளுக்கான அட்டவணையை ஏற்கனவே வெளியிட்டது. இந்நிலையில், தற்போது புதிதாக மாற்றி அமைக்கப்பட்டுள்ள அட்டவணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள், தேர்வு திட்டம், ஆகியவை குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், இனி குரூப் 2 பதவிகளுக்கு நடைமுறையில் இருந்து வந்த நேர்முகத் தேர்வு இனி கிடையாது என்ற நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

முதன்மை தேர்வில் தேர்வர்கள் பெரும் மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட இருப்பதாகவும், குரூப் 2ஏ பதவிகளுக்கான முதன்மை தேர்வு திட்டமும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, தமிழ் தகுதித்தாள் தேர்வு, பொது அறிவு மற்றும் மொழிப்பாடங்கள் ஆகியவை இனி விடைகளை தேர்ந்தெடுத்து விடை அளிக்கும் கொள்குறி முறையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. மேலும் குருப் 2 பதவிகளில் எந்தத் துறையில் உதவியாளர் பணிக்கு தேர்வுச் செய்யப்படுவார்கள் என்ற விபரத்தையும் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி குரூப் 2 நேர்முகத் தேர்வு ரத்து வரவேற்கத்தக்கது என்றும் நிலையான தேர்வு அட்டவணை, கூடுதல் சீர்திருத்தம் தேவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் தொகுதி 2 பணிகளுக்கு இனி நேர்முகத்தேர்வுகள் நடத்தப்படாது என்பது உள்ளிட்ட பல்வேறு சீர்திருத்தங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்திருக்கிறது.

தேர்வர்கள் நலன் கருதியும், தேர்வுகளை விரைவுபடுத்தவும் அறிவிக்கப்பட்டுள்ள இச்சீர்திருத்தங்கள் வரவேற்கத்தக்கவை என தெரிவித்துள்ளார். மேலும், 2ஏ தொகுதியில் இதுவரை இருந்து வந்த நகராட்சி ஆணையர், தலைமைச் செயலக உதவி பிரிவு அதிகாரி ஆகியவை தொகுதி 2க்கு மாற்றப்பட்டு விட்டன. இவை தவிர 2ஏ தொகுதியில் உள்ள அனைத்து பணிகளும் சாதாரணமானவை தான்.

அப்பணிகளுக்காக முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு என இரு தேர்வுகளை நடத்த வேண்டிய தேவையில்லை. எனவே, 2ஏ தொகுதி பணிகளுக்கு இனி ஒரே தேர்வை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முன்வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அதனை தொடர்ந்து, முதல் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டு, ஏப்ரல் மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஜூலை மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட்டு, டிசம்பர் மாதத்தில் இறுதி முடிவுகள் வெளியிடப்பட வேண்டும்.

இரண்டாம் தொகுதி பணிகளுக்கான அறிவிக்கை மார்ச் மாதம் வெளியிடப்பட்டு, மே மாதத்தில் முதல்நிலைத் தேர்வு, ஆகஸ்ட் மாதத்தில் முதன்மைத் தேர்வு நடத்தப்பட வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் இரண்டு முறை அறிவிக்கைகள் வெளியிடப்பட்டு, மார்ச், செப்டம்பர் மாதங்களில் தேர்வுகளை நடத்தி முறையே மே, நவம்பர் மாதங்களில் முடிவுகளை வெளியிட வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு கோரிக்கை வைத்துள்ளார்.

Updated On: 25 April 2024 9:47 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?