/* */

சிவகங்கை அதிமுக வேட்பாளருக்கு இனிப்பு ஊட்டி மகிழ்ந்த இஸ்லாமிய சிறுமிகள்

சிவகங்கை அதிமுக வேட்பாளருக்கு ரமலான் பண்டிகையையொட்டி இஸ்லாமிய சிறுமிகள் இனிப்பு ஊட்டி மகிழ்ந்தனர்.

HIGHLIGHTS

சிவகங்கை அதிமுக வேட்பாளருக்கு இனிப்பு ஊட்டி மகிழ்ந்த இஸ்லாமிய சிறுமிகள்
X

சிவகங்கை அதிமுக வேட்பாளருக்கு இனிப்பு ஊட்டிய இஸ்லாமிய சிறுமிகள்.

வாக்கு சேகரிக்க வந்த அதிமுக வேட்பாளருக்கு ரமலான் பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமிய சிறுமிகள் இனிப்பு ஊட்டி மகிழ்ந்தனர்.

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட அதிமுக வேட்பாளருக்கு இஸ்லாமிய சிறுமிகள் ரமலான் பண்டிகையை முன்னிட்டு இனிப்பு ஊட்டி வாழ்த்து தெரிவித்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் சேவியர் தாஸ் காளையார்கோவில் ஒன்றியத்திற்குட்பட்ட மறவமங்களம், முடிக்கரை, கஞ்சிப்பட்டி, பருத்தி கண்மாய் உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

இதில், மறவமங்களத்தில் பிரச்சாரம் மேற்கொண்டபோது அங்கிருந்த இஸ்லாமிய சிறுமிகள் வேட்பாளர் சேவியர் தாஸிற்கு இனிப்புகளை ஊட்டி விட்டு ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, சிறுமிகளுக்கு வேட்பாளரும் இனிப்புகளை ஊட்டிவிட்டதுடன் அங்கிருந்த பொது மக்களுக்கு ரமலான் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

சிவகங்கை அதிமுக வேட்பாளர் சேவியர் தாஸ் தீவிர பிரசாரத்திலர் ஈடுபட்டு வருகிறார். பொதுமக்கள் அவரை வரவேற்று ஆரத்தி எடுத்தனர். சில கிராமங்களில் பொதுமக்கள் இனிப்புகள் வழங்கியும் வாழ்த்துகள் தெரிவித்தனர்..

Updated On: 12 April 2024 4:59 AM GMT

Related News

Latest News

  1. அவினாசி
    அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை
  2. சோழவந்தான்
    சமயநல்லூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  3. உசிலம்பட்டி
    மதுரை காமராஜர் பல்கலைக்கழக கழக துணை வேந்தர் ராஜினமா
  4. ஈரோடு
    ஈரோடு கலை அறிவியல் கல்லூரிக்கு ஏ+ அங்கீகாரம் வழங்கியது நாக் அமைப்பு
  5. திருவள்ளூர்
    திருவள்ளூர் மாவட்டத்தில் 7 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வு
  6. கும்மிடிப்பூண்டி
    மாதர்பாக்கத்தில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த கோவிந்தராஜன் எம்எல்ஏ
  7. நாமக்கல்
    வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு திடீர் அறிவிப்பு
  8. நாமக்கல்
    வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர்...
  9. ஈரோடு
    கோபி வெங்கடேஸ்வரா கல்வி நிறுவனங்களில் படித்த 603 மாணவர்களுக்கு பணி...
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?