/* */

வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து கலெக்டர் எச்சரிக்கை

Namakkal news- வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் குறித்த போலியான விளம்பரங்களில் இளைஞர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

HIGHLIGHTS

வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி  விளம்பரங்கள் குறித்து கலெக்டர் எச்சரிக்கை
X

Namakkal news-வெளிநாட்டு வேலை வாய்ப்புக்கான போலி விளம்பரங்கள் குறித்து ஆட்சியர் எச்சரிக்கை (கோப்பு படம்)

Namakkal news, Namakkal news today- நாமக்கல், வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் குறித்த போலியான விளம்பரங்களில் இளைஞர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.

இது குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:

தமிழ்நாட்டைச் சார்ந்த பல்வேறு உயர் தொழில்நுட்பக் கல்வி படித்த இளைஞர்களை சோசியல் மீடியாக்கள் மூலமாக மூளைச்சலவை செய்து கம்போடியா, தாய்லாந்து மற்றும் மியான்மார் நாட்டிலுள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில், (Digital Sales and Marketing Executive), (Data Entry Operator) வேலை உள்ளது. அதிக சம்பளம் கிடைக்கும் என்ற பெயரில் ஏமாற்றி, சுற்றுலா விசாவில் அழைத்துச் சென்று அவர்களை கால்-சென்டர் மோசடி மற்றும் கிரிப்டோ கரன்சி மோசடி போன்ற சட்ட விரோத செயல்களில் கட்டாயப்படுத்தி ஈடுபடுத்தப்படுவதாகவும் அவ்வாறு செய்ய மறுக்கும் நிலையில் அவர்கள் துன்புறுத்தப்படுவதாகவும் தொடர்ந்து அரசுக்கு புகார்கள் வருகின்றன.

இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க, வெளிநாடுகளுக்கு வேலைக்காக செல்லும் இளைஞர்கள், அரசினால் பதிவு செய்யப்பட்ட ஏஜென்சிகள் மூலம் மட்டுமே வேலைக்கான விசா, முறையான பணி ஒப்பந்தம், என்ன பணி போன்ற விவரங்களை சரியாகவும், முழுமையாகவும் தெரிந்து கொண்டும். அவ்வாறான பணிகள் குறித்த விவரங்கள் தெரியாவிடில், தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத்துறை அல்லது சென்னை குடிபெயர்வோர் பாதுகாப்பு அலுவலர் அல்லது சம்மந்தப்பட்ட நாட்டில் உள்ள இந்திய தூதரகங்களை தொடர்பு கொண்டு, பணி செய்யப் போகும் நிறுவனங்களின் உண்மைத் தன்மையை உறுதி செய்துகொள்ள வேண்டும். இந்திய வெளியுறவுத் துறை மற்றும் வேலைக்கு செல்லும் நாடுகளிலுள்ள இந்திய தூதரகங்களின் வெப்சைட்டில் வெளியிடப்படும் அறிவுரைகளின்படி செயல்பட வேண்டும்.

அரசினால் பதிவு செய்யப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட ஏஜெண்டுகள் குறித்த விபரங்களை www.emigrate.gov.in என்ற வெப்சைட்டில் அறிந்து கொள்ளலாம். மேலும், சென்னை குடிபெயர்வு அலுவலக உதவி எண்.90421 49222 மூலமாகவும், poechennai1@mea.gov.in, poechennai2@mea.gov.in என்ற இமெயில் மூலமாகவும் இது தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கங்கள் பெறலாம்.

வெளிநாடுகளில் உள்ள தமிழர்களுக்கு உதவிபுரிய தமிழ்நாடு அரசின் அயலகத் தமிழர் நலத்துறை செயல்பட்டு வருகிறது. வெளிநாடு தமிழர்கள் உதவி தேவைப்படின் இத்துறையின் கட்டணமில்லா 24 மணி நேர அழைப்புதவி மையத்தினை 1800 309 3793, 8069009901 மற்றும் 8069009900 (Missed Call No.) என்ற தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டு தெரிவிக்ககலம் என கூறப்பட்டுள்ளது.

Updated On: 5 May 2024 9:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  2. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  3. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  4. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  6. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  7. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  8. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  9. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  10. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை