/* */

மாதர்பாக்கத்தில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த கோவிந்தராஜன் எம்எல்ஏ

கும்மிடிப்பூண்டி அருகே மாதர் பாகத்தில் தண்ணீர் பந்தலை கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ. கோவிந்தராஜன் திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

மாதர்பாக்கத்தில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த கோவிந்தராஜன் எம்எல்ஏ
X

மாதர்பாக்கத்தில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்த கோவிந்தராஜன் எம்எல்ஏ.

மாதர்பாக்கத்தில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் இளைஞரணி சார்பில் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஜெ.மோகன் பாபு ஏற்பாட்டில் நீர் மோர் பந்தலை கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினர் டி.ஜெ. கோவிந்தராஜன் திறந்து வைத்து பழச்சாறு நீர்,மோர் உள்ளிட்டவை வழங்கினார்.


திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றியம் மாதர்பாக்கம் பேருந்து நிலையம் அருகே திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மாதர்பாக்கம் ஜெ.மோகன் பாபு ஏற்பாட்டில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.ஒன்றிய செயலாளர் மணிபாலன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் லோகேஷ், பொதுக்குழு உறுப்பினர் குணசேகரன், ஆகியோர் முன்னிலை வகித்தார்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் கும்மிடிப்பூண்டி சட்டமன்ற உறுப்பினருமான டி.ஜெ. கோவிந்தராஜன் கலந்துகொண்டு தண்ணீர் பந்தலை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களுக்கு மாதர் பாக்கம் பகுதியில் உள்ள கடை வியாபாரிகளுக்கும், பேருந்துக்காக காத்திருக்கும் பயணிகளுக்கு நீர், மோர், தர்பூசணி, பழச்சாறு உள்ளிட்டவைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

இதில் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் சங்கர், மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் முரளி, பாஸ்கர், இளைஞர் அணியைச் சேர்ந்த சுரேஷ், எஸ்வந்த், மஸ்தான், லோகேஷ், மற்றும் மோகனசுந்தரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் போது முன்னாள் அதிமுக கிளை செயலாளர் ராஜா தன் குடும்பத்துடன் சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தராஜன் முன்னிலையில் திமுகவில் இணைந்தார்.

Updated On: 5 May 2024 9:27 AM GMT

Related News

Latest News

  1. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  2. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  3. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  5. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  6. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  7. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!
  8. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  9. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!
  10. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை...