/* */

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு திடீர் அறிவிப்பு

வெங்காய ஏற்றுமதிக்கான தடையை நீக்கம் செய்ய மத்திய அரசு திடீர் என அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

HIGHLIGHTS

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்:  மத்திய அரசு திடீர் அறிவிப்பு
X

இந்தியாவில் இருந்து வெங்காயம் ஏற்றுமதிக்கான தடையை மத்திய அரசு நீக்கியுள்ளது.

குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் பெருமளவில் வெங்காயம் சாகுபடி செய்யும் விவசாயப் பகுதிகளை உள்ளடக்கிய 3வது கட்ட பாராளுமன் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு, வெங்காய ஏற்றுமதி மீதான தடையை மத்திய அரசு நேற்று 4ம் தேதி நீக்கியுள்ளது. இருப்பினும், ஒரு டன்னுக்கு குறைந்தபட்ச ஏற்றுமதி விலை 550 அமெரிக்க டாலர் மற்றும் 40 சதவீதம் ஏற்றுமதி வரி விதிப்பதன் மூலம் ஏற்றுமதியாகும் வெங்காயத்தின் அளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. குறைந்தபட்ச ஏற்றுமதி விலை, வரி விதிப்பும் சேர்த்து ஒரு டன் வெங்காயத்தின் விலை 770 டாலராக உயர்ந்துள்ளது. நேற்று 4ம் தேதி சனிக்கிழமை மத்திய நிதி மற்றும் வர்த்தக அமைச்சகங்கள் இதற்கான அறிவிப்பை தனித்தனியாக வெளியிட்டுள்ளன. இதன் மூலம் புதிய நிபந்தனைக்குட்பட்ட ஏற்றுமதி முறை, உடனடியாகத் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் உத்தரவு வரும் வரை இது அமலில் இருக்கும்.

குஜராத்தில் இருந்து 2,000 டன் வெள்ளை வெங்காயம் ஏற்றுமதிக்கு அனுமதிக்கும் முடிவுக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கடுமையான விமர்சனங்களை வெளியிட்டுள்ளனர். முக்கியமாக சிவப்பு வெங்காயத்தை பயிரிடும் மகாராஷ்டிரா விவசாயிகள், ஏற்கனவே மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு நீட்டித்த தடைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. சமீப காலமாக, வெங்காயத்தின் முக்கிய ஏற்றுமதி நாடுகளான இந்தியா, பாகிஸ்தான் மற்றும் எகிப்து உள்ளிட்ட பல நாடுகள் வெங்காயத்தின் ஏற்றுமதியை தடை செய்தனர். எகிப்து கடந்த மாதம் கட்டுப்பாடுகளை நீக்கியது, பாகிஸ்தான் சமீபத்தில் கட்டுப்பாடுகளை நீக்கியது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், பல்வேறு காரணங்களுக்காக வெங்காய ஏற்றமதிக்கு 40 சதவீதம் வரியை மத்திய அரசு விதித்தது. இந்த நடவடிக்கைகள் விலையை நிலைப்படுத்தவும், தேவை-விநியோகம் பொருந்தாத தன்மையைக் குறைக்கவும், பங்குகளை சந்தையில் செலுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தன. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இயல்பை விட அதிக வெப்பம் நிலவியது. இதைத் தொடர்ந்து மார்ச் மாத இறுதியில் இருந்து ஏப்ரல் தொடக்கத்தில் பருவமழை பெய்தது. இரண்டு தட்பவெப்ப நிலைகளும் வெங்காயப் பயிரின் வளர்ச்சி சுழற்சியுடன் ஒத்துப்போனதால், இறுதியில், தேவை மற்றும் விநியோகம் பொருந்தாமல் போனது. இருந்தாலும், இந்த ஆண்டில் வெங்காயத்தின் விலை ஏப்ரல் மாதத்தில் இருந்து கிலோ ஒன்றுக்கு ரூ. 15 என்ற அளவில் நிலையானதாக உள்ளது என அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Updated On: 5 May 2024 9:22 AM GMT

Related News