/* */

பொன்னேரி அருகே தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து

பொன்னேரி அருகே மூடி வைக்கப்பட்டிருந்த தொழிற்சாலையில், திடீர் தீ விபத்து ஏற்பட்டது. 5 மணி நேரம் போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.

HIGHLIGHTS

பொன்னேரி அருகே தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து
X

பொன்னேரி அருகே, தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

பொன்னேரி அருகே மூடி வைக்கப்பட்டிருந்த தொழிற்சாலையில் கழிவு பொருட்களில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இரண்டு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைத்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த சிறுவாபுரியில் தனியாருக்கு சொந்தமான இரும்பு உருக்காலை பல ஆண்டுகளாக மூடி வைக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைக்குள் பல்வேறு கழிவு பொருட்கள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் திடீரென கழிவு பொருட்களில் தீ பற்றி கொழுந்து விட்டு கரும்புகையுடன் எரிய தொடங்கியது. இந்த தீ விபத்து குறித்து அளிக்கப்பட்ட தகவலின் பேரில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி தீயணைப்பு நிலையங்களில் இருந்து இரண்டு வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயினை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். ரசாயன நுரையையும், தண்ணீரையும் பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் தீவிரம் காட்டினர்.


கோடை வெயில் ஒருபுறம் சுட்டெரித்து வரும் சூழலில் தீபிழம்புகளின் வெப்பம் மறுபுறம் என தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வந்த நிலையில் சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். பல ஆண்டுகளாக மூடப்பட்டுள்ள தொழிற்சாலை என்பதால் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் தொழிலாளர்கள் மட்டுமே உள்ளதால் யாருக்கும் தீக்காயம் ஏதும் ஏற்படவில்லை எனவும், மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீ விபத்தால் அப்பகுதியில் கரும்பு புகை சூழ்ந்தது இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Updated On: 1 May 2024 3:00 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  2. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  4. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  5. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  6. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  8. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  9. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  10. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!