/* */

அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் பதிவு செய்துள்ள ஒப்பந்ததாரர்கள் மாவட்ட அளவிலான ஒப்பந்ததாரராக பதிவு செய்து கொள்ளலாம்

HIGHLIGHTS

அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு
X

திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலகில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் ஊராட்சி ஒன்றியங்களின் மூலம் ஒன்றிய மற்றும் மாநில அரசின் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் பதிவு பெற்ற ஒப்பந்ததாரர்கள் வாயிலாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

அதன்படி தற்போது திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றியங்களிலும் பதிவு செய்துள்ள ஒப்பந்ததாரர்கள் மற்றும் பிறதுறைகளில் பதிவு செய்துள்ள ஒப்பந்ததாரர்களும் கீழ்க்காணும் ஆவணங்களை அளித்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் மாவட்ட அளவிலான ஒப்பந்ததாரராக பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பதிவுக்காக இணைக்க வேண்டிய ஆவணங்கள் பின்வருமாறு.

1. சொத்து மதிப்பு சான்றின் நகல். (சால்வன்சி) -ரூ30.00 இலட்சத்திற்கு மேல்.

2. சொத்து மதிப்பு மீதான நடப்பு ஆண்டு வில்லங்க சான்றின் நகல்- சால்வன்சி தேதி முதல் விண்ணப்ப தேதி வரை.

சம்மந்தப்பட்ட சார்பதிவாளர் அலுவலத்திலிருந்து பெற்று வழங்க வேண்டும்

3. நடப்பு ஆண்டுக்கான வருமான வரி சான்றின் நகல்- Assessment Year 2023-24

4.Form of GST No நகல்.

5. Form of GSTR-3B நகல்.

6. அனுபவச்சான்று.

7. பான்கார்டு நகல்.

8. ஏற்கனவே பதிவில் உள்ளவர்கள் கறுப்பு பட்டியலில் இடம் பெறவில்லை, ஒப்பந்தத்தில் கலந்துக் கொள்ளாமல் இருக்கவில்லை என்பதற்கான சுயசான்று அளிக்க வேண்டும்.

9. ஓப்பந்த பதிவு கட்டணம் ரூ45000-க்கான வங்கிவரைவோலை. Collector and Chairman, DRDA, Tiruvannamalai என்ற பெயரில் திருவண்ணாமலையில் மாற்றதக்க வகையில் இணைக்க வேண்டும்.)

10. வங்கிப் புத்தக நகல்

11. ஆதார் அட்டை நகல்

12. புகைப்படம் -2 (பாஸ்போர்ட் அளவில்)

13. பிற துறையில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யப்பட்டிருப்பின் அதன் நகல்.

14. அனைத்து ஆவணங்களிலும் நோட்டரி பப்ளிக் சான்றொப்பம் (Attestation) பெறப்பட வேண்டும்.

15. சம்மந்தப்பட்ட தனியரின் கைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி.

16. Construction பெயரில் பதிவு செய்யForm C Certificate & Partnership Deed பெற்று அளிக்க வேண்டும்.

மேலும் மாவட்ட அளவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் ஒப்பந்ததாரராக பதிவு மேற்கொள்ளும்போது

திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சி அலகில் 18 ஊராட்சி ஒன்றியங்களிலும் ஒப்பந்தப்பணிகள் எடுத்து செய்ய இயலும் என கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) ரிஷப் தெரிவித்துள்ளார்

Updated On: 3 May 2024 11:52 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  2. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  3. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  4. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  5. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  6. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  7. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  9. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  10. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!