/* */

சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!

மதுரை அருகே, உள்ள சேது பொறியியல் கல்லூரியில் 17 வயது மற்றும் அதற்கு கீழே உள்ள வீரர்களுக்கு மாநில அளவிலான சதுரங்க போட்டி துவங்கியது.

HIGHLIGHTS

சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான   செஸ் போட்டி.!
X

காரியாபட்டி ,சேது பொறியியல் கல்லூரியில் நடந்த செஸ்  போட்டி.

காரியாபட்டி.

மதுரை அருகே, உள்ள சேது பொறியியல் கல்லூரியில், மாநில அளவில் 17 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு சதுரங்கப் போட்டி துவங்கியது. சேது பொறியியல் கல்லூரியும், சிவகாசி சதுரங்க கழகமும் இணைந்து இந்த மாநில அளவிலான சதுரங்க போட்டியை நடத்துகிறது.

போட்டியை, கல்லூரி நிறுவனர் மற்றும் தலைவர் எஸ் .முகமது ஜலீல் தலைமை தாங்கி துவக்கி வைத்தார். கல்லூரி முதன்மை நிர்வாக அதிகாரிகள் எஸ் .எம். சீனி முகைதீன் ,எஸ் .எம். சீனி முகமது அலி யார், எஸ்.எம். நிலோப்பர் பாத்திமா , எஸ்.எம். நாசியா பாத்திமா, முதல்வர் சிவக்குமார் தமிழக சதுரங்கப் போட்டி இணை செயலாளர் பிரகதீஷ், சிவகாசி சதுரங்க கழக செயலாளர் ஆனந்த ராமன், ஆர்பிட்டர் தினகரன் முன்னிலை வகித்தனர்.

ஆண்கள் பிரிவில், 224 மகளிர் பிரிவில் 96 வீராங்கனைகளும் கலந்து கொண்டனர். இதில், ஒன்பது சுற்று நடைபெற்று ஆண்கள் பிரிவிலிருந்து பத்து பேரும், பெண்கள் பிரிவில் 10 பேரும் தேர்வு செய்யப்பட்டு, மொத்தம் ஒரு லட்சம் பரிசு தொகை வழங்கப்படுகிறது.

மற்றும் சிறப்பு பரிசுகளாக 11 வயது கீழ் உள்ளவர்களுக்கும் 13 வயது கீழ் உள்ளவர்களுக்கும் வழங்கப்பட உள்ளது .

ஒன்பது சுற்றிலும் அனைத்து வீரர்களும் கலந்து கொள்வார்கள் .நிகழ்ச்சி ஏற்பாட்டை, கல்லூரி மின்னணுவியல் மற்றும் தொடர்புத்துறை பேராசிரியர் மற்றும் சதுரங்கப் போட்டியின் ஒருங்கிணைப்பாளருமான ஷேக் தாவூத் சிறப்பு அதிகாரி துரைராஜ் தலைமையில் பேராசிரியர்கள் சாகுல் ஹமீத் ,நாகராஜ் ,சிவபாரதி , ஷேக் மைதீன் ,மலைச்சாமி மற்றும் மக்கள் மக்கள் தொடர்பு அதிகாரி லட்சுமணராஜ் செய்திருந்தனர்.

Updated On: 4 May 2024 8:09 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?