/* */

ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!

ராகுல் காந்தியை பொறுத்தவரை ரேபரேலியில் போட்டியிடுகிறார், அது காங்கிரசின் கோட்டையாக உள்ளது. கண்டிப்பாக மாபெரும் வெற்றி அடைவார் என்றார் எம்பி விஜய் வசந்த்.

HIGHLIGHTS

ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
X

காங்கிரஸ் எம்பி விஜய் வசந்த்.

மதுரை:

பெங்களூரில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்த கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறுகையில்:

ரேபரேலி தொகுதியில், ராகுல்காந்தி போட்டியிடுவது குறித்த கேள்விக்கு:

ராகுல் காந்தி இம்முறை ரேபரேலி தொகுதியில் போட்டியிடுகிறார். மாபெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். பிரதமர் மோடி அமேதியில் நிற்காமல் ரேபரேலியில் நிற்கிறார் என்று விமர்சித்துள்ளார். தோற்றுவிடுவோம் என்கிற பயத்தில் மோடியின் பேட்டியும், நிலைப்பாடுகளும் மாறி வருகிறது.

400 இடங்கள் என்று சொல்லிய நிலையில் தற்போது ஆட்சி அமைப்பது கேள்விக்குறியாக உள்ளதால் மக்களிடம் வெறுப்பை உண்டு பண்ணுவதற்காக, பிரிவினையை கொண்டு வருவதற்காக இப்படி பேசுகிறார். ராகுல் காந்தியை பொறுத்தவரை ரேபரேலியில் போட்டியிடுகிறார் .அது காங்கிரசின் கோட்டையாக உள்ளது. கண்டிப்பாக மாபெரும் வெற்றி அடைவார்.

வெற்றி வாய்ப்பு குறித்த கேள்விக்கு:

தமிழக முதல்வர் சொன்னதைப்போல 40க்கு 40லும் காங்கிரஸ் திமுக கூட்டணி கைப்பற்றும். பிரதமர் மோடி தொடர்ந்து ஐந்து முறை தமிழகத்திற்கு வந்தாலும் வெற்றி வாய்ப்பாக மாறாது என்பது இந்த தேர்தல் அவர்களுக்கு உணர்த்தும்.

மீண்டும் திரைப்படத்தில் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு:

கோட் திரைப்படம் ஷூட்டிங் முடிந்துள்ளது. வெங்கட் பிரபு அண்ணனுக்கும், விஜய் அண்ணனுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தேர்தல் வேளையில் இருந்ததால் நடிப்பதற்கான வாய்ப்புகள் இல்லை. நிச்சயமாக வாய்ப்பு இருந்தால் கண்டிப்பாக நடிப்பேன்.

டி20 உலக கோப்பை அணியில் தமிழக வீரர்களுக்கு வாய்ப்பு இல்லாதது குறித்த கேள்விக்கு:

தற்போது ,ஐபிஎல் வந்த பிறகு நிறைய திறமைசாலிகள் வெளியே வருகிறார்கள். அனைவரையும் அணியில் சேர்க்க முடியாது. அணியை தேர்வு செய்பவர்கள் அவர்களால் முடிந்த அளவிற்கு தேர்வு செய்துள்ளார்கள். மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பிக்கையோடு இருக்க வேண்டும். சஞ்சு சம்சனுக்கு பல நாட்களுக்குப் பிறகு வாய்ப்பு வந்துள்ளது. அதுபோல அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்கும். அது போல அனைவருக்கும் வாய்ப்பு கிடைக்கும் தொடர்ந்து அவர்கள் முயற்சி செய்ய வேண்டும் என்றார்.

Updated On: 4 May 2024 8:49 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?