/* */

பவானி அருகே மயக்கமடைந்த பெண்ணை தாக்கிய அதிமுக பிரமுகர் மீது வன்கொடுமை வழக்கு

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த அம்மாபேட்டை அருகே மயக்கமடைந்த பெண் தொழிலாளியை தாக்கிய அதிமுக பிரமுகர் மீது வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

பவானி அருகே மயக்கமடைந்த பெண்ணை தாக்கிய அதிமுக பிரமுகர் மீது வன்கொடுமை வழக்கு
X

கவின்.

பவானி அடுத்த அம்மாபேட்டை அருகே மயக்கமடைந்த பெண் தொழிலாளியை தாக்கிய அதிமுக பிரமுகர் மீது வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த அம்மாபேட்டை அருகேயுள்ள பூதப்பாடி சமத்துவபுரம் காலனியைச் சேர்ந்தவர் சித்ரா (வயது 39). கூலி தொழிலாளி. இவர் கடந்த மாதம் 12ம் தேதி பூதப்பாடி பேருந்து நிறுத்தத்தில் இருந்து வீட்டுக்கு நடந்து சென்றபோது, அப்பகுதியில் உள்ள ஹாலோ பிளாக் கம்பெனி நுழைவாயிலில் திடீரென மயக்கமடைந்தார்.

இதைக்கண்ட ஹாலோ பிளாக் கம்பெனி உரிமையாளரும், அதிமுக பிரமுகருமான கவின், மயக்க நிலையில் இருந்த சித்ராவை தகாத வார்த்தையால் பேசி, அடித்து கொடுமைப்படுத்தியுள்ளார். இதில், காயமடைந்த சித்ரா அந்தியூர் அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து சித்ரா அளித்த அளித்த புகாரின் பேரில் அம்மாபேட்டை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

பின்னர், கூலித் தொழிலாளியை தாக்கிய கவின் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப் பட்டது. இந்த நிலையில் எஸ்சி, எஸ்டி பிரிவு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தலைமறைவாக உள்ள அதிமுக பிரமுகரான கவினை போலீசார் தேடி வருகின்றனர்.

Updated On: 4 May 2024 2:30 AM GMT

Related News

Latest News

  1. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  2. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  3. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  5. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  6. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  7. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!
  8. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  9. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!
  10. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை...