/* */

வாட்டும் வெயிலில் இருந்து தப்பிக்க வாகன ஓட்டிகளுக்காக பசுமை பந்தல்

வாட்டும் வெயிலில் இருந்து தப்பிக்க வாகன ஓட்டிகளுக்காக கோவை மாநகராட்சி சார்பில் பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

வாட்டும் வெயிலில் இருந்து தப்பிக்க வாகன ஓட்டிகளுக்காக பசுமை பந்தல்
X

கோவையில் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள பசுமை பந்தல்.

தமிழகம் முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பல்வேறு மாவட்டங்களில் வெயில் பதிவாகி மக்களை வாட்டி வதைத்து வருகிறது. கோவை மாவட்டத்திலும் கடந்த சில தினங்களாகவே 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெயிலானது பதிவாகி வருகிறது. பல்வேறு பகுதிகளில் நீர் நிலைகள் வறண்டு காணப்படுகிறது. மேலும் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. வெயிலில் இருந்து தற்காத்து கொள்வதற்கு அரசு மற்றும் மருத்துவர்கள் பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கி வருகின்றனர். குறிப்பாக வெயில் அதிகம் உள்ள மதிய நேரங்களில் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர், நீர் மோர் பந்தல்களில் மக்கள் தாகம் தணித்து வருகின்றனர். வெயிலில் குறிப்பாக வாகன ஓட்டிகள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இந்த நிலையில் கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மாநகராட்சி பகுதிகளில் வெயில் அதிகமாக இருக்கக்கூடிய சிக்னல்களில் வாகன ஓட்டிகளுக்காக பசுமை பந்தல் அமைக்கும் பணியை துவக்கி உள்ளது.

கோவை- மேட்டுப்பாளையம் சாலையில் கண்ணப்பன் நகர் சிக்னலில் முதல் கட்டமாக இந்த பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 10 இடங்களில் பசுமை பந்தல் அமைக்க உள்ளதாகவும், தேவைக்கேற்ப பல்வேறு பகுதிகளில் இதனை விரிவுபடுத்த உள்ளதாகவும் மாநகராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க இந்த பசுமை பந்தல் உதவிகரமாக இருக்கும் எனவும் இரு சக்கர வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர்.

Updated On: 3 May 2024 9:58 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?