/* */

உச்ச பச்ச வெயிலால் பூமியில் உயிரினங்கள் அழியும்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை

உச்ச பச்ச வெயிலால் பூமியில் உயிரினங்கள் அழியும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

உச்ச பச்ச வெயிலால் பூமியில் உயிரினங்கள் அழியும்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை
X

பூமியில் ஒரு உயிரினம் கூட மிச்சமில்லாமல் மொத்தமாக அழிந்துவிடும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பிரிஸ்டல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கணினி உருவகப்படுத்துதல் தொழில்நுட்பத்தின் மூலம் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளனர்.

பூமியில் மனிதன், விலங்குகள் உள்ளிட்ட எந்த உயிரினமும் வாழ முடியாத நிலை ஏற்பட்டு பூமி, மொத்தமாக அழியப்போவதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி அளிக்கும் தகவலை தெரிவித்துள்ளனர்.

டெல்லி மெயில் அறிக்கையின்படி, பிரிஸ்டல் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் கணினி உருவகப்படுத்துதல் தொழில்நுட்பத்தின் மூலம் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளனர்.அதில், இன்னும் 250 மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு பூமியில் பேரழிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக கண்டுபிடிக்கப்படுள்ளது.

விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, பூமியில் மனிதன் உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும் மறைந்துவிடும். அந்த நேரத்தில் பூமியின் வெப்பநிலை 70 டிகிரி செல்ஸியஸை எட்டும். அத்தகைய சூழலில் பூமியில் எந்த உயிரினமும் வாழ இயலாது. அனைத்தும் வெப்பத்தின் காரணமாக அழிந்துவிடும்.

பூமியில் நாம் கார்பனை வெளியேற்றும் வேகத்தின் காரணமாக இந்த அழிவு விரைவில் நிகழ வாய்ப்புள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல நிகழ்ந்திருக்கலாம் என்றும், அதன் காரணமாக டைனோசர்கள் அழிந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

இந்த ஆய்வு குழுவின் தலைவர் அலெக்சாண்டர் ஃபார்ன்ஸ்வொர்த் கூறுகையில், அந்த நேரத்தில் உலகில் கார்பன் டை ஆக்சைட்டின் அளவு இப்போது இருப்பதை விட இரண்டு மடங்கு அதிகமாக இருக்கலாம். இதன் காரணமாக உடல் வெப்பமடைந்து மனிதர்கள் இறந்துப்போகும் சூழல் உருவாகும். பின்னர் பூமியின் அனைத்து கண்டங்களும் ஒன்றிணைந்து ஒரு சூப்பர் கண்டத்தை உருவாக்கும், அது பாங்கேயா அல்டிமா என்று அழைக்கப்படுகிறது

பூமி முதலில் சூடாகவும், பின்னர் வறண்டதாகவும், இறுதியாக வாழத் தகுதியற்றதாகவும் மாறும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதமட்டுமன்றி வெப்பம் தாங்காமல் எரிமலைகள் வெடித்து சிதறி, பூமியின் பெரும்பகுதி எரிமலையால் மூடப்பட்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது

அவ்வாறு நிகழும்போது அது அதிக அளவு கார்பன் டை ஆக்சைடை வெளியிடும். அதனால் மக்கள் சுவாசிக்க சிரமப்படுவார்கள். அதன்பிறகு படிப்படியாக பூமியில் ஒரு உயிரினம் கூட மிச்சமில்லாமல் மொத்தமாக அழிந்துவிடும் எனவும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

Updated On: 3 May 2024 12:06 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  2. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  4. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  5. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  6. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  8. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  9. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  10. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!