/* */

விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்

16 அடி அகலமும், 33 அடி உயரமும் கொண்ட இந்த திருக்கோயில் முழுவதும் கருங்கற்களால் அழகிய வேலைபாடுடன் 18 சித்தர்கள் உருவங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

விஷார் ஸ்ரீ அகத்தியர் திருக்கோயில் மகா கும்பாபிஷேகம்
X

மூலவர் விமான கோபுரத்திற்கு புனித நீரூற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கோவில் நகரமான காஞ்சிபுரத்திற்கு அருகே உள்ள விஷார் கிராமத்தில் ஸ்ரீ அருள்மிகு லோபமுத்ரா சமேத அகத்தியர் மகரிஷிக்கு திருக்கோவில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

16 அடி அகலமும் 33 அடி உயரமும் கொண்ட இத் திருக்கோவில் முழுவதும் கருங் கற்களால், அழகிய வேலைபாடுகளுடன்,18 சித்தர்களின் உருவங்களோடு பிரம்மாண்டமாக காட்சியளிக்கும் வகையில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.

அகத்தியர் மகரிஷிக்கு தனி கோவிலாக கட்டியுள்ள திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா இன்று வெகு விமர்சியாக நடைபெற்றது.

மகா கும்பாபிஷேக விழாவை ஒட்டி யாகசாலைகள் அமைக்கப்பட்டு கங்கை, யமுனை, சரஸ்வதி, உள்ளிட்ட ஏழு புண்ணிய நதிகளில் இருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டு 151 கலசங்கள் வைத்து ஐந்து யாக குண்டங்களில் சிறப்பு யாகங்கள் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இன்று காலை யாகசாலையில் பூரண ஹதி முடித்து,புனித நீர் கலசங்கள் மேள தாளங்கள், சிவ வாத்தியங்கள் முழங்க, சிவாச்சாரியார்கள் ஊர்வலமாக கொண்டு வந்து,வேத மந்திரங்கள் ஓதி,சிறப்பு பூஜைகள் செய்து, அகத்தியர் மகரிஷி திருக்கோவில் கோபுரத்திற்கு புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

மகா கும்பாபிஷேக விழாவினை தொடர்ந்து மூன்று அடி உயரத்தில் பிரதிஷ்ட்டை செய்யப்பட்டுள்ள மூலவர் லோபமுத்ரா சமேத அகத்தியர் மகரிஷிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து பக்தர்களின் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

மகா கும்பாபிஷேக விழாவில் காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேக விழாவை கண்டு,சுவாமி தரிசனம் செய்து வணங்கி வழிபட்டனர்.

மகா கும்பாபிஷேகம் விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு மா,பலா, வாழை என முக்கனிகளுடன் கூடிய சிறப்பு அன்னதானங்களும் வழங்கப்பட்டது.

விழா ஏற்பாடுகளை திருக்கோயில் அறங்காவலர் குமரவேல், பொருளாளர் ருத்ரகுமார் ஆகியோர் சிறப்பாக மேற்கொண்டனர். மாலை திருக்கல்யாணம் நடைபெற உள்ளது அதனைத் தொடர்ந்து 500 பெண்களுக்கு வஸ்தர தானம் செய்யப்பட உள்ளது.

Updated On: 3 May 2024 4:45 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  2. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  3. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  4. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  5. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  6. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  8. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்
  9. லைஃப்ஸ்டைல்
    சிரிப்பும் சந்தோஷமும் நிறைந்த தமிழ் திருமண வாழ்த்துகள்!
  10. காஞ்சிபுரம்
    ஆதிசங்கரரின் உபதேசங்களை மொழிபெயர்க்க வேண்டும்..!