/* */

வாலாஜாபாத் அருகே பசு மாடுகள் இறந்தது தொடர்பாக ஒருவர் கைது

வாலாஜாபாத் அடுத்த தென்னேரி பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற பசுமாடுகள் மர்மமாக இறந்தது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

வாலாஜாபாத் அருகே பசு மாடுகள் இறந்தது தொடர்பாக  ஒருவர் கைது
X

கைது செய்யப்பட்ட ஜெயராமன்.

வாலாஜாபாத் அடுத்த தென்னேரி கிராமத்தில் நேற்று மேய்ச்சலுக்கு சென்ற 9 பசுமாடுகள் மர்மமான முறையில் உயிரிழந்ததால் கிராமத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இச்சம்பவம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த ஜானகிராமன் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் வட்டம் தென்னேரி கிராமம் அமைந்துள்ளது. இங்கு சுமார் 2500 மக்கள் வசித்து வரும் நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான அந்த பகுதி ஏரியில் பாசனம் மூலம் சுமார் 500 ஏக்கர் விலை நிலங்களில் நெல் பயிரிடப்பட்டு கடந்த ஒரு மாதமாக அறுவடை செய்யப்பட்டு வந்தது.

அறுவடை முடிந்த காரணங்களால் அப்பகுதி கால்நடைகள் மேய்ச்சலுக்காக நேற்று காலை சென்றுள்ளது.இந்நிலையில் மதியம் 3 மணிக்கு மேல் கால்நடைகள் ஒன்றன் பின் ஒன்றாக கிராமத்திற்கு திரும்புகையில் ஆங்காங்கே திடீரென பசுமாடுகள் மயங்கி விழுந்துள்ளது.

மயங்கி விழுந்த மாடுகளுக்கு முதல் உதவி செய்வதற்குள் சுமார் ஒன்பது மாடுகள் இறந்துள்ளது. மேலும் 4 மாடுகளுக்கு முதல் உதவி சிகிச்சை இப்போது அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் , மேய்ச்சலுக்கு செல்லும் வழியில் நெல் குவியல்கள் இருப்பதாகவும் அதை மாடுகள் சேதம் செய்வதை கண்ட ஒருவர் மாடுகளுக்கு ஏதேனும் பூச்சி மருந்து கலந்த உணவை அளித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக கூறினர். சம்பவ இடத்தில் வாலாஜாபாத் வட்டாட்சியர் சதீஷ் , வாலாஜாபாத் காவல் ஆய்வாளர் பிரபாகர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இறந்த மாடுகளின் பிரேத பரிசோதனை அங்கேயே நடைபெற்ற நிலையில் அப்பகுதியில் விசாரணை மேற்கொண்ட வாலாஜாபாத் காவல்துறையினர் அதே பகுதியை சேர்ந்த ஜெயராமன் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு அதன் பின் அவர் மேல் ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அவரது நிலத்தில் அறுவடை செய்த நெல்லை அருகில் உள்ள அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வதற்காக அங்கு குவித்து வைத்திருந்த நிலையில் அதனை மாடுகள் சேதம் செய்ததால் ஆத்திரம் கொண்டு அந்த செயலை அவர் மேற்கொண்டதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Updated On: 1 May 2024 11:25 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  2. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  3. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  4. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  6. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  7. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  8. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  9. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  10. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை