/* */

இந்தியாவின் சூப்பர்சானிக் டர்பீடோக்கள்..! கதறும் சீனா, அலறும் வல்லரசுகள்!

இந்தியா விதவிதமான ஆயுதங்களை தயாரித்து வருகிறது. அது சீனாவை மட்டுமல்ல, அமெரிக்காவையும் அச்சுறுத்தியுள்ளது.

HIGHLIGHTS

இந்தியாவின் சூப்பர்சானிக் டர்பீடோக்கள்..!  கதறும் சீனா, அலறும் வல்லரசுகள்!
X

பிரம்மோஸ் சூப்பர்சோனிக் (கோப்பு படம்)

சீனா தனது நான்காவது விமானந்தாங்கி கப்பலை கட்டி முடித்தது. அது அமெரிக்காவின் ஃபோர்டுக்கு இணையானது. நிமிட்ஸ் கிளாஸ், உலகின் சிறப்பானது. 80,000 டன் எடை கொண்ட மிகப்பெரியது என்று சீனாவே பெருமையுடன் சொல்லிக்கொள்கிறது.

அதற்கு சீனா US$ 3.8 பில்லியன் செலவு செய்து அதை கட்டியுள்ளது. சீனா அமெரிக்காவைப்போல உலகை ஆளப்போகிறது என்று அல்லக்கைகள் சிலர் கொண்டாடுகிறார்கள். அதை வரவேற்க, இந்தியா பிரம்மோஸ் என்ற வகை, ஏவுகணையை, அதன் வாயிலில் இருக்கும் பிலிப்பைன்ஸுக்கு கொடுத்துள்ளது. அதன் விலை US $3.8 மில்லியன். அதில் மூன்றே முன்று ஏவுகணை போதும் சீனாவின் அந்த மிகபலமான புத்தம்புது விமானந்தாங்கி கப்பலை தாக்கி முழுமையாக அழித்து விட முடியும்.

சீனா, பிலிப்பைன்ஸை அளவுக்கு அதிகமாக அசிங்கப்படுத்தி வந்த நிலையில் பிலிப்பன்ஸுக்கு பிரம்மோஸ் ஏவுகணைகளை இந்தியா விற்றுள்ளது. அதாவது இந்தியா பிலிப்பைன்ஸ் செலவில் சீனாவிற்கு சூனியம் வைத்துள்ளது. சீனாவின் ஆதரவாளர்கள் அடுத்த வல்லரசு அதுதான் என்று தம்பட்டம் அடித்துக்கொண்டு உள்ளார்கள். ஆனால் அவர்கள் நம் மக்களை நம்பவைக்கும் அளவிற்கு நமக்கு அதுபற்றி தெரியாததால். அதனால் கொஞ்சம் விரிவாக, இந்தியன் என்ற பெருமையோடு படியுங்கள்.

அமெரிக்காவிடம் 11 விமானாந்தாங்கி கப்பல்கள் உள்ளன. அதன் மூலம் அந்த ஒரு படையை வைத்தே சாதாரணமான ஒரு நாட்டை தாக்கி அழிக்கவோ, அல்லது பிடிக்கவோ முடியும். அதனால்தான் அமெரிக்கா உலக வல்லரசாகி, உலகம் முழுவதும் கோலோச்சியது.

ஆனால் ரஷ்யாவிடம் ஒரே ஒரு விமானந்தாங்கி கப்பல் தான் உள்ளது. மாறாக அதனிடம் மிக வலுவான நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளன. அது மேற்சொன்ன மிகப்பெரிய விமானந்தாங்கி கப்பலையே அழிக்கக்கூடியது.

இந்தியா பாகிஸ்தான் போரில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக அமெரிக்காவும், பிரிட்டிஷும் இந்தியாவை இரண்டே இரண்டு விமானந்தாங்கி கப்பலால் சுற்றி வளைத்து விட்டனர். இந்தியாவை மீண்டும் தங்கள் கைக்குள் கொண்டு வந்து விட முடியும் என்று கனவுடன் அந்த நாட்டு கப்பல்கள் அரபிக்கடலிலும், வங்காள விரிகுடாவிலும் நுழைந்து விட்டன.

ஆனால் ரஷ்யாவின் நீர்மூழ்கி கப்பல்கள் இந்தியாவிற்கு ஆதரவாக அங்கே வந்துவிட்டதை அந்த நாடுகள் உணரவில்லை. அங்கிருந்து திரும்பி போகாவிட்டால், மொத்த விமானந்தாங்கி கப்பற்படைகளையும் தாக்கி அழிப்போம் என்று ரஷ்யா கர்ஜித்தது.

அதனால் இரண்டு பெரிய விமானந்தாங்கி கப்பற்படைகளும் பின்வாங்கி ஓடி விட்டன. இந்த விஷயம் பல இந்தியர்களுக்கே இன்னும் தெரியவாய்ப்பில்லை. அடுத்த வல்லரசாக துடிக்கும் சீனா, பெரிய விமானந்தாங்கி கப்பலை கட்டிக்கொண்டுள்ளது. அதற்கென சொந்த மூளை கிடையாது. அதனால் அது அமெரிக்காவின் நூறாண்டு பழைய வழியையே பின்பற்றுகிறது.

அது சமீபத்தில் தனது நான்காவது மிகப்பெரிய விமானந்தாங்கி கப்பலை கட்டி முடித்துள்ளது. அந்த விமானந்தாங்கி கப்பல்கள், நீர்மூழ்கி கப்பலிடம் இருந்து தற்காத்துக்கொள்ளும் பாதுகாப்பு கொண்டவை.

ஆனால் அந்த கப்பல்களால் இந்தியாவின் பிரம்மோஸுக்கு பதில் சொல்ல முடியாது. அந்த நான்கு மிகப்பெரிய கப்பலை அழிக்க, இந்தியாவின் 12 பிரம்மோஸ் ஏவுகணைகள் போதும். அதுவும் அதை தரை, கடல், வான் என்று மூன்று நிலைகளில் இருந்தும் அதை ஏவ முடியும்.

பிலிப்பைன்ஸ் என்பது பல தீவுகளை கொண்ட சீனாவிற்கு அருகில் தென் சீனக்கடலில் உள்ள ஒரு குட்டி நாடு. அந்த நாட்டினை சீனா தன்னிடம் இருந்த வலுவான கப்பற்படையை வைத்து, கொடுமைப்படுத்தி வந்தது.பிலிப்பைன்ஸ்க்கு அமெரிக்கா பாதுகாப்பு கொடுக்கிறது என்றாலும், அதனால் அதை சீனாவை நேரடியாக சமாளிக்க முடியவில்லை.

இந்த நிலையில் இந்தியாவிடம் இருந்து பிலிப்பைன்ஸ் அதன் வலிமைக்கு மீறி செலவு செய்து பிரம்மோஸ் வகை ஏவுகனையை வாங்கியுள்ளது. அதை வைத்து சீனாவின் மிகப்பலமான விமானந்தாங்கி கப்பலை தாக்கி மூழ்கடிக்க முடியும். அதை நிலம், நீர், ஆகாயம் என்று எல்லா நிலைகளில் இருந்தும் ஏவ முடியும் என்பதால் பல தீவுகளை கொண்ட பிலிப்பைன்ஸ் அதை எங்கே இருந்து தாக்கப்போகிறது என்று சீனாவிற்கு தெரியாது.

இன்னும் சொல்லப்போனால் பிலிப்பைன்ஸ் நாடு சீனாவிடம் நான், இத்தனை மணிக்கு பிரம்மோஸை ஏவுகிறேன் என்று நேரம் காலம் குறித்து அதை ஏவினாலும் கூட, சீனாவால் அதை தடுக்க முடியாது. சீனாவால் மட்டுமல்ல, அமெரிக்காவல் கூட முடியாது என்பது தான் பிரம்மோஸ் ஏவுகணையின் ஹைலைட்டே.

அதனால் சீனா இப்போதைக்கு தனது நான்கு விமானந்தாங்கி கப்பலை ஒரே இடத்தில் வைக்க முடியாது. அதுமட்டுமா, இந்தியா இப்போது சூப்பர்சானிக் டர்பீடோக்களை தயாரித்துள்ளது. டர்பீடோக்கள் என்பது நீருக்குள் செல்லும் சிறியவகை ஏவுகணைகள். அது கப்பல்கள் முதல் நீர்மூழ்கி வரை தாக்கி அழிக்கக்கூடியவை. ஆனால் அதன் தாக்கும் தூரம் என்பது 350 கிமீ தூரம் வரை மட்டுமே.. அப்படியெனில் கப்பல்கள் அருகில் சென்று தான் அதை தாக்க முடியும். அது ஆபத்தானது.

இந்த நிலையில் சமீபத்தில் இந்தியா சூப்பர்சோனிக் டர்பீடோக்களை தயாரித்துள்ளது. அதாவது நீண்ட தூரம் செல்லும் ஏவுகணைகளில் இருந்து இந்த டர்பீடோக்களை வைத்து தாக்கக்கூடிய காம்போ வகை ஏவுகணைகளை டர்பீடோக்கள் தாங்கிச் செல்லும் என்பதால், இந்தியா வங்காள விரிகுடாவில் இருந்தே தென் சீனக்கடலில் இருக்கும் சீனாவின் விமானந்தாங்கி கப்பலையோ அல்லது மேற்பரப்பில் உள்ள அதன் நீர்மூழ்கி கப்பலையோ அழிக்க முடியும்.

பில்லியன்களில், ட்ரில்லியன்களில் சீனா அதன் மிகப்பெரிய கப்பற்படையை கட்டி, உலக வல்லராசி விடலாம் என்ற கனவில் இருந்தது. ஆனால் இந்தியா அதற்கு மில்லியன்களில் முடிவுரை எழுதும் வல்லமையை பெற்ற பின்னர், சீனா உலகத் தரம் வாய்ந்த கப்பற்படையினை வைத்துக் கொண்டு, வாழ்வே மாயம் என்று பாடிக்கொண்டு இருக்கிறது. என்னடா இது சீனாவிற்கு வந்த சோதனை.

Updated On: 5 May 2024 7:43 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?