/* */

பிரதமர் ஸ்டாலின்: திமுக வட்டாரத்தில் இப்போது இது தான் ஹாட் டாபிக் ஸ்பீச்

இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால் ஸ்டாலின் தான் பிரதமர் என திமுக வட்டாரத்தில் இப்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

HIGHLIGHTS

பிரதமர் ஸ்டாலின்: திமுக வட்டாரத்தில் இப்போது இது தான் ஹாட் டாபிக் ஸ்பீச்
X

மு.க. ஸ்டாலின்.

வேட்டிக் கட்டிய தமிழன் பிரதமராகிறார் என்று திமுக வெளிப்படையாக சொல்ல தொடங்கி உள்ளது. உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பேச்சை குறிப்பிட்டு திமுக இந்த கருத்துக்களை தெரிவிக்க தொடங்கி உள்ளது.

நேற்று கொல்கத்தாவில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்த நாடு மூன்று தசாப்தங்களாக.. அதாவது 30 வருடங்கள் மோசமான ஆட்சியை எதிர்கொண்டது. வலிமையான நபர் பிரதமராக இல்லை. இந்தியா ஸ்திரமின்மைக்கு விலை கொடுத்தது, ஸ்திரமற்ற அரசாங்கங்கள் மூன்று தசாப்தங்களாக இயங்கின.

இந்திய பிரதமர்கள் கூட்டணி ஆட்சி அமைத்தனர். இதனால் வலிமையான முடிவுகளை எடுக்க முடியவில்லை. வலிமையற்ற ஆட்சியே நீடித்தது. வலிமையான ஒரு உறுதியான முடிவை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. ஆனால் மோடி ஆட்சி அப்படி இல்லை. மோடி ஆட்சி வலிமையான ஆட்சி. தனித்துவமான ஆட்சி. கடந்த 10 ஆண்டுகளில் நாடு வலுவான தலைமையைப் பெற்றுள்ளது, ஸ்திரத்தன்மையைப் பெற்றுள்ளது. இதற்கு காரணம் பிரதமர் வலிமையாக இருப்பதால். மற்ற கட்சிகளின் மிரட்டல்களை கேட்க வேண்டிய கட்டாயம் பிரதமர் மோடிக்கு இல்லை. அரசியல் ஸ்திரத்தன்மை மட்டுமல்ல, கொள்கைகளிலும் ஸ்திரத்தன்மை உள்ளது. ஆனால் இந்தியா கூட்டணி அப்படி இல்லை. அவர்கள் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் நிலைமை மோசமாகும். அவர்களிடம் பிரதமர் முகம் இல்லை. இதனால் கூட்டணியை காக்க ஒரு வருடம் ஒரு பிரதமர் திட்டத்தை கையில் எடுப்பார்கள். வளர்ச்சித் திட்டங்கள் இப்போது போல கொண்டு வர முடியாது.

சரத் பவார் ஒரு வருடத்திற்கு (பிரதமர்) தேர்ந்தெடுக்கப்படுவார், மம்தா ஜி ஒரு வருடத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுவார், ஸ்டாலின் ஒரு வருடத்திற்குத் தேர்ந்தெடுக்கப்படுவார், மற்றவர்கள் விட்டுவிட்டால் ராகுல் ஜி தேர்ந்தெடுக்கப்படுவார். .நாடு நடத்துவது இப்படி இல்லை. வலிமையான தலைவர் வேண்டும், என்று அமித் ஷா குறிப்பிட்டு உள்ளார்.

இந்த நிலையில்தான் வேட்டி கட்டிய தமிழன் பிரதமராகிறார் என்று திமுக வெளிப்படையாக சொல்ல தொடங்கி உள்ளது. திமுக செய்தி தொடர்பு இணை செயலாளர் சரவணன் உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் பேச்சை குறிப்பிட்டு இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

இந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு முழு மெஜாரிட்டி வரும் பட்சத்தில் ராகுல் காந்தியைதான் பிரதமராக அறிவிக்க கட்சி முடிவு செய்துள்ளதாம். ஆனால் ஒருவேளை காங்கிரஸ் கட்சிக்கு முழு மெஜாரிட்டி கிடைக்காமல் இந்தியா கூட்டணியின் ஆதரவு தேவைப்பட்டாலும் ராகுல் காந்தியை முன்மொழியும் திட்டம் உள்ளதாம்.

ஆனால் இந்தியா கூட்டணிக்கும் பெரும்பான்மை இல்லாமல் தொங்கு நாடாளுமன்றம் உருவாகும் பட்சத்தில்.. திரிணாமூல் காங்கிரஸ், பிஜூ ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவை கேட்க காங்கிரஸ் திட்டமிடுகிறதாம். அப்படிப்பட்ட சமயங்களில் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி பிரதமர் ஆக முடியாது. ராகுல் காந்தியை பிரதமராக ஏற்றுக்கொள்ள மம்தா பானர்ஜி இறங்கி வரமாட்டார் . ஆம் ஆத்மியும் இதற்கு தயாராக இருக்காது. இப்படிப்பட்ட சமயங்களில் எல்லா கூட்டணி கட்சிகளும் ஏற்றுக்கொள்ள கூடிய தலைவரை பிரதமராக தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் திமுகவிற்கு ஏற்படும்.

அப்படி ஒரு சூழல் ஏற்பட்டால் முதல்வர் ஸ்டாலின் இந்திய பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று திமுக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Updated On: 1 May 2024 11:26 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?