/* */

பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!

தனது கணிதப்பாட ஆசிரியை பிச்சையெடுத்ததை கண்ட மாணவி கண்ணீர் விட்டதோடு, அவரை பாதுகாத்து வருகிறார்.

HIGHLIGHTS

பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
X

ஆசிரியை பூர்ணிமா மாணவர்களுடன் எடுத்துக்கொண்ட படம் (பழைய படம்)

இந்த செய்தி கொஞ்சம் பழையது என்றாலும், குருவுக்கு செய்யும் மரியாதையை நினைவுறுத்தும் மறக்கமுடியாத நெகிழ்ச்சி சம்பவம் ஆகும்.

செய்திக்குள் உள்ள இந்த புகைப்படத்தில் இருக்கும் ஆசிரியை பூர்ணிமா. அவர் கேரளாவில் உள்ள மலப்புரத்தில் கணித ஆசிரியராக பணியாற்றியுள்ளார். ஒரு நாள் பூர்ணிமா ஆசிரியையிடம் படித்த மாணவி ஒருவர் ரயில் நிலையம் அருகில் பெண்மணி ஒருவர் பிச்சை எடுப்பதை உற்று நோக்கியுள்ளார். அருகில் சென்று பார்த்த பின்பு தான் தெரிந்தது, பிச்சை எடுப்பது தனக்கு கணிதப்பாடம் எடுத்த தனது ஆசிரியை என்று.

அந்த மாணவி ஆசிரியரிடம் பேசிய போது, ​​"நான் ஓய்வு பெற்ற பிறகு என் குழந்தைகள் என்னை வீட்டை விட்டு வெளியேற்றி விட்டனர். அன்றிலிருந்து தங்குவதற்கு இடமில்லாமல் ரயில் நிலையத்தின் முன்னால் இப்படி பிச்சை எடுக்க ஆரம்பித்தேன் " என்று கண்ணீருடன் கூறியுள்ளார்.


அந்த மாணவி அழுதபடி ஆசிரியரை வீட்டிற்கு அழைத்துச் சென்று நல்ல ஆடை, உணவு கொடுத்து, தங்கவைப்பதற்கு திட்டமிட்டார். பின்னர் அந்த மாணவியுடன் படித்த ஒவ்வொரு பள்ளி நண்பரையும் தொடர்பு கொண்டு, ஆசிரியையின் நிலையை கூறி ஆசிரியைக்கு தேவையான உதவிகளையும் தங்குவதற்கு தேவையான இட வசதியும் செய்து கொடுத்துள்ளனர்.

அவர்களுடைய சொந்த குழந்தைகள் வீட்டை விட்டு வெளியேற்றினாலும், ஆசிரியை கற்பித்த குழந்தைகள் தக்க நேரத்தில் உதவியுள்ளனர். இதுதான் ஒரு மாணவன், ஒரு மாணவி தன் குருவுக்கு செய்யும் தலையாய கடமை.

இந்த சம்பவம் பழையது என்றாலும் மீண்டும் குருவுக்கு செய்யும் மரியாதையை எல்லோரும் நினைத்துப் பார்ப்பதற்கும், மாணவர்கள் மத்தியில் ஆசிரியர்கள் மீது பணிவும் மரியாதையும் ஏற்படவும் இந்த செய்தி பயனுள்ளதாக இருக்கும்.

Updated On: 4 May 2024 5:06 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?