/* */

பத்தாம் வகுப்பு பாட புத்தகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றிய பாடம்

பத்தாம் வகுப்பு பாட புத்தகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றிய பாடம் இடம் பெற உள்ளது.

HIGHLIGHTS

பத்தாம் வகுப்பு பாட புத்தகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றிய பாடம்
X

முன்னாள் முதல்வர் கருணாநிதி.

9ம் வகுப்பு புத்தகத்தை தொடர்ந்து 10 ம் வகுப்பு தமிழ் பாட புத்தகத்திலும் கலைஞர் கருணாநிதி பற்றிய பாடம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்காக கலைஞர் கருணாநிதியின் சிறப்புகள் என்ற பெயரில் 11 தலைப்புகளில் உள்ளடக்கி பாடம் தயாரிக்கப்பட்டுள்ளது.

குழந்தை உள்ள கலைஞர், போராட்ட கலைஞர், பேச்சு கலைஞர், நாடக கலைஞர், திரை கலைஞர், இதழியல் கலைஞர், இயற்றமிழ் கலைஞர் என்ற தலைப்புகளில் பாடம் கவிதை கலைஞர், கட்டுமான ஆர்வலர் கலைஞர், செம்மொழி கலைஞர் என 11 தலைப்புகளில் கருணாநிதி சிறந்து விளங்கிய துறைகள், அவர் செய்த சாதனைகள் 10ம் வகுப்பு தமிழ் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

2021ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் ஸ்டாலின் தலைமையிலான திமுக கூட்டணி வெற்றி பெற்று தமிழகத்தில் ஆட்சியை பிடித்தது. 10 வருடங்கள் கழித்து ஆட்சிக்கு வந்த ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு, பாடப்புத்தகத்தில் மறைந்த முன்னாள் முதல்வரும், திமுகவின் முதுப்பெரும் தலைவருமான கலைஞர் கருணாநிதியின் வாழ்க்கை வரலாறு பாடப் புத்தகத்தில் சேர்க்கப்படும் என அறிவித்தது. கடந்த 2023-24ம் கல்வியாண்டின் போது தமிழக அரசின் பாடத்திட்டத்தின்படி உள்ள 9-ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் தமிழ் மொழிக்கு செம்மொழி அந்தஸ்து கிடைப்பதற்கு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து பாடமாகச் சேர்க்கப்பட்டன. இந்நிலையில் பத்தாம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்தில் நடப்பாண்டில் உரைநடை பகுதியில் "பன்முகக் கலைஞர்" என்ற தலைப்பில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பல்வேறு திறன்கள் குறித்தும், தமிழ் மற்றும் கலைத்துறையில் செய்த பணிகள் குறித்தும் 5 பக்கங்கள் கொண்ட பாடம் சேர்க்கப்பட்டிருக்கிறது.

குழந்தை உள்ளக் கலைஞர், போராட்ட கலைஞர், பேச்சு கலைஞர், நாடக கலைஞர், திரை கலைஞர், இதழியல் கலைஞர், இயற்றமிழ் கலைஞர், கவிதை கலைஞர், கட்டுமான ஆர்வலர் கலைஞர், செம்மொழி கலைஞர் என 11 தலைப்புகளில் கருணாநிதி சிறந்து விளங்கிய துறைகள், அவர் செய்த சாதனைகள் இடம் பெற்றிருக்கிறது மேலும், இந்த பாடப் பகுதியின் இறுதியில் தமிழ் வெல்லும் என்று கலைஞர் கருணாநிதியின் கையெழுத்தையும் பதித்துள்ளனர். பல்வேறு திறன்கள் மூலம் அரசியல் மற்றும் எழுத்து உலகிலும் சிறந்து விளங்கினார் என்பதற்காக கருணாநிதியின் திறமைகளை விளக்கும் வகையில் பத்தாம் வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் ஒரு பாடமாகச் சேர்த்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

Updated On: 1 May 2024 11:18 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?