/* */

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் ஆர்வத்துடன் வாக்களித்த பெண் வாக்காளர்கள்

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்துள்ளனர்.

HIGHLIGHTS

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் ஆர்வத்துடன் வாக்களித்த  பெண் வாக்காளர்கள்
X

ஆர்வமுடன் வாக்களிக்க வந்த பெண் வாக்காளர்களுடன் திருவண்ணாமலை  மாவட்ட கலெக்டர்

ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் வாக்களிப்பதில் கூடுதல் ஆர்வம் செலுத்தியதால் 2353 பெண் வாக்காளர்கள் ஆண் வாக்காளர்களை விட கூடுதலாக வாக்குகள் செலுத்தியுள்ளனர்.

திருவண்ணாமலை நாடாளுமன்ற தொகுதியில் பெண் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்துள்ளனர்

கலசபாக்கம் தொகுதியில் பெண் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்துள்ளனர். இந்திய மக்களவையின் 18 வது பொது தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது.

அதன் முதற்கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடைபெற்றது. திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்குட்பட்ட கலசபாக்கம் சட்டமன்ற தொகுதியில் 281 வாக்குச்சாவடி மையங்களில் 122 982 ஆண் வாக்காளர்கள் 126 839 பெண் வாக்காளர்கள் மூன்றாம் பாலினம் 12 என 249 833 வாக்காளர்கள் வாக்குகளை பதிவு செய்திட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

நேற்று முன்தினம் காலையில் கலசபாக்கம் தொகுதியில் பெரும்பாலான வாக்குச்சாவடி மையங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. இருப்பினும் மாலையில் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்குப்பதிவு சூடு பிடித்தது. கலசபாக்கம் தொகுதியில் 92, 276 ஆண் வாக்காளர்கள், 94, 629 பெண் வாக்காளர்கள், மூன்றாம் பாலினம் 5 என 1,86, 910 வாக்காளர்கள் தங்களது வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.

72.99% வாக்குகள் கலசபாக்கம் தொகுதியில் பதிவாகியுள்ளது.

ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் வாக்களிப்பதில் கூடுதல் ஆர்வம் செலுத்தியதால் 2353 பெண் வாக்காளர்கள் ஆண் வாக்காளர்களை விட கூடுதலாக வாக்குகள் செலுத்தியுள்ளனர். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் வாக்குச்சாவடி மையங்களில் இருந்து துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் விடிய விடிய திருவண்ணாமலை ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

Updated On: 21 April 2024 1:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...