/* */

திருவண்ணாமலையில் கோடைகால பயிற்சி முகாம்

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் கோடை காலம் பயிற்சி முகாம் நடக்கிறது.

HIGHLIGHTS

திருவண்ணாமலையில் கோடைகால பயிற்சி முகாம்
X

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெறும் கோடைகால பயிற்சி முகாமில் 18 வயதுக்கு உள்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெறும் கோடைகால பயிற்சி முகாமில் 18 வயதுக்கு உள்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இது குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் திருவண்ணாமலை பிரிவு சாா்பில், கோடைகால பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

மல்லா் கம்பம், கால்பந்து, கையுந்துப் பந்து, தடகளம், இறகுப் பந்து விளையாட்டுப் பிரிவுகளில் ஏப்ரல் 29-ஆம் தேதி முதல் மே 13-ஆம் தேதி வரை இந்தப் பயிற்சி முகாம் நடைபெறுகிறது.

முகாமில் 18 வயதுக்கு உள்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளலாம். காலை 6.30 மணி முதல் 8.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் 6.30 மணி வரையும் பயிற்சி நடைபெறும். பயிற்சிக் கட்டணம் தலா ஒருவருக்கு ரூ.200. பயிற்சிக் கட்டணத்தை ஆன்லைன் மூலம் மட்டுமே செலுத்த வேண்டும்.

முகாமில் கலந்து கொள்ளும் மாணவ, மாணவிகள் தங்கள் பெயரை மாவட்ட விளையாட்டு அரங்கில் பதிவு செய்து கொள்ளலாம்.

முகாமில் கலந்து கொள்வோா் ஆதாா் அடையாள அட்டை நகலை சமா்ப்பிக்க வேண்டும். பயிற்சியை நிறைவு செய்வோருக்கு சான்றிதழ் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு இணையதளத்திலோ அல்லது மாவட்ட விளையாட்டு அலுவலரை 7401703484 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளாா்.

Updated On: 28 April 2024 1:40 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : பாரத பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் வேட்புமனு தாக்கல் ||...
  2. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. கோவை மாநகர்
    11 ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த கோவை
  5. திருவள்ளூர்
    மின்சாரம் பாய்ந்து வடமாநில தொழிலாளி உயிரிழப்பு!
  6. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை இழந்தவர்களுக்கு அவர்களின் பிறந்தநாளில் செய்ய வேண்டியது என்ன?
  7. மாதவரம்
    புழல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து
  8. சேலம்
    மேட்டூர் அணை நீர்வரத்து 138 கன அடியாக அதிகரிப்பு
  9. லைஃப்ஸ்டைல்
    காதல் நிறைந்த வாழ்க்கைப் பயணம்! கணவருக்கு திருமண ஆண்டுவிழா...
  10. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அன்பான ஆண்டுவிழா வாழ்த்துகள்!