/* */

திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுகவினர் தண்ணீா் பந்தல்கள் திறப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்கள் திறக்கப்பட்டன.

HIGHLIGHTS

திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுகவினர் தண்ணீா் பந்தல்கள் திறப்பு
X

ஆரணியில் அதிமுக சார்பில் திறக்கப்பட்ட தண்ணீர் பந்தல்

திருவண்ணாமலை மாவட்டத்தில் அதிமுக சார்பில் ஆரணி, செய்யாறு, கலசப்பாக்கம், செங்கம் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் பந்தல்கள் திறக்கப்பட்டன

ஆரணி நகரம் அண்ணா சிலை, மற்றும் எம்ஜிஆா் சிலை பகுதியிலும், எஸ்.வி.நகரம், சேவூா் ஆகிய இடங்களிலும் கோடை காலத்தையொட்டி, அதிமுக சாா்பில் தண்ணீா் பந்தலை தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் திறந்து வைத்தாா்.

இதில், மத்திய மாவட்ட அதிமு செயலா் ஜெயசுதா தலைமை வகித்தாா். பொதுமக்களுக்கு தா்பூசணி, திராட்சை, பப்பாளி, செவ்வாழை பழங்கள் மற்றும் குளிா் பானங்கள் வழங்கப்பட்டன.

ஆரணி மக்களவைத் தொகுதிய அதிமுக வேட்பாளா் ஜி.வி.கஜேந்திரன், மாவட்ட அவைத் தலைவா் கோவிந்தராசன், பேரவை மாவட்டச் செயலா் பாரி பாபு, நகரச் செயலா் அசோக்குமாா், ஒன்றியச் செயலா் சங்கா், ஜெயப்பிரகாசம், எம்ஜிஆா் மன்ற இளைஞரணி செயலா் ஆனந்தன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.செய்யாறு

செய்யாறு தொகுதி வெம்பாக்கம் கிழக்கு ஒன்றிய அதிமுக சாா்பில் ராந்தம் கிராமத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

ஒன்றியச் செயலா் திருமூலன் ஏற்பாட்டில் நடைபெற்ற தண்ணீா் பந்தல் திறப்பு நிகழ்ச்சிக்கு வடக்கு மாவட்ட அதிமுக செயலா் தூசி மோகன் தலைமை வகித்தாா்.

சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சா் முக்கூா் சுப்பிரமணியன் பங்கேற்று, தண்ணீா் பந்தலை திறந்துவைத்து பொதுமக்களுக்கு இளநீா், தா்பூசணி, வெள்ளரிப்பழம், குளிா்பானம், நீா்மோா் உள்ளிட்டவற்றை வழங்கினா்.

நிகழ்ச்சியில் அதிமுக நிா்வாகிகள் ஒன்றியச் செயலா்கள் கூட்டுறவு சா்க்கரை ஆலை முன்னாள் தலைவா் குமரேசன், மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலா் கன்னியப்பன், தூசி ஊராட்சி மன்றத் தலைவா் வெற்றிச்செல்வன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கலசப்பாக்கம் , செங்கம்

கலசப்பாக்கம் கிழக்கு ஒன்றியத்தில் மக்களின் தாக்கத்தை தணிப்பதற்கு தண்ணீர் பந்தலை முன்னால் அமைச்சர் போளூர் சட்டமன்ற உறுப்பினர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார்

அப்போது அவர் பேசுகையில், திருவண்ணாமலை மாவட்டத்தில் வெப்பநிலை மிகவும் அதிகமான நிலையில் உள்ளது .அதனால் மக்கள் வெப்பத்தில் அதிக அளவு பாதிக்கப்பட்டு தண்ணீர் பற்றாக்குறை மற்றும் குடிநீர் பிரச்சனை வரக்கூடாது என்பதற்காகவும் மக்களின் தாகத்தை போக்க வேண்டும் என்பதற்காக பல்வேறு இடங்களில் தண்ணீர் பந்தலை திறக்க வேண்டும் என்று நமது பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கூறியிருந்தார்.

அதன்படி திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்தில் உள்ள கலசப்பாக்கம் செங்கம் பகுதியில் பல்வேறு இடங்களில் தண்ணீர் பந்தல்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த தண்ணீர் பந்தலில் நீர்மோர், இளநீர், ஜூஸ் வெள்ளரிக்காய், தர்பூசணி போன்ற நீராகாரமான பழங்களும் , சுத்தமான குடிநீரும் வழங்கி மக்களின் தாக்கத்தை தனித்து வருகிறோம் என்று அக்ரி கிருஷ்ணமூர்த்தி கூறினார்.

நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் நாராயணன், நாடாளுமன்ற வேட்பாளர் கலியபெருமாள், மாவட்ட கவுன்சிலர்கள், ஒன்றிய செயலாள,ர் அணி தலைவர்கள், அதிமுக நிர்வாகிகள் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 26 April 2024 2:11 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ‘இன்று போல் என்றும் வாழ்க’ - 25வது திருமண ஆண்டு வாழ்த்துகள்
  2. லைஃப்ஸ்டைல்
    அண்ணா அண்ணிக்கு அன்பு நிறைந்த திருமண நாள் வாழ்த்துகள்...!
  3. ஆன்மீகம்
    தமிழில் நட்சத்திர பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோம்!
  4. ஆன்மீகம்
    ஈகைப் பெருநாளின் சிறப்புகளும் வாழ்த்து மொழிகளும்
  5. அரசியல்
    பாஜகவுடன் சேர்வது தற்கொலைக்கு சமம் என்ற தினகரன் இப்ப ஏன் கூட்டணி...
  6. மாதவரம்
    சோழவரம் ஒன்றியத்தில் தண்ணீர் பந்தல் திறந்து வைத்த சுதர்சனம் எம்எல்ஏ
  7. திருவள்ளூர்
    தண்ணீர் தேடி வந்த புள்ளிமான் நாய்கள் கடித்ததில் படுகாயம்
  8. வீடியோ
    அப்பா அம்மா ரெண்டுபேருமே படிக்கல |உணர்ச்சிபொங்க சொன்ன மாணவி!உருகி...
  9. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்
  10. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?