/* */

முட்டை விலை 30 பைசா சரிவு; கோழிப் பண்ணையாளர்கள் அதிர்ச்சி

Namakkal news- முட்டை விலை 2 நாட்களில் 30 பைசா சரிவடைந்தததால், கோழிப் பண்ணையளார்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

முட்டை விலை 30 பைசா சரிவு; கோழிப் பண்ணையாளர்கள் அதிர்ச்சி
X

Namakkal news  -முட்டை விலை 30 பைசா சரிவு (கோப்பு படம்)

Namakkal news, Namakkal news today- முட்டை விலை 2 நாட்களில் 30 பைசா சரிவடைந்தததால், கோழிப் பண்ணையளார்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

நாமக்கல், சேலம், ஈரோடு, தர்மபுரி, கோவை உள்ளிட்ட நாமக்கல் மண்டலத்தில் 1,000க்கும் மேற்பட்ட முட்டைக் கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு சுமார் 6 கோடி முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. அவற்றின் மூலம், தினமும், 5 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் முட்டைகள், தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாட்டிற்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மீதம் உள்ளவை, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், விற்பனைக்காக லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகின்றன.

தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி), தினசரி பண்ணைகளில் ரொக்க விற்பனைக்கு, முட்டை விலையை அறிவித்து வருகிறது. கடந்த, 1ம் தேதி முட்டை கொள்முதல் விலை, 426 பைசாவாக நிர்ணயம் செய்யப்பட்டது. அதையடுத்து, 12ம் தேதி 420, 15ம் தேதி 430, 17 ம் தேதி 435, 18 ம் தேதி 440 காசு என படிப்படியாக அதிகரித்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் 10 காசு சரிந்து, 430 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. நேற்று மேலும், 20 காசு குறைக்கப்பட்டு 410 பைசவாக நிர்ணயம் செய்யப்பட்டது. இரண்டு நாட்களில் ஒர முட்டைக்கு 30 பைசா சரிவடைந்ததால் பண்ணையாளர்களை கவலை அடைந்துள்ளனர்.

இது குறித்து, தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத்தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது:

தமிழகத்தில் கடும் வெயில் காரணமாக, முட்டை உற்பத்தி 15 சதவீதம் குறைந்துள்ளது. மேலும், வெயில் காலத்தில் முட்டை நுகர்வும் 10 சதவீதம் சரிந்துள்ளது. தற்போது, பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால், சத்துணவு திட்டத்திற்கும் ஹாஸ்டல்களுக்கும் அனுப்பப்படும் முட்டைகள் தேக்கம் அடைந்துள்ளன. அதேபோல், வெளிநாட்டிற்கு மாதம் 15 கோடி முட்டை ஏற்றுமதி செய்துவந்த நிலையில், தற்போது 50 சதவீதம் ஏற்றுமதி குறைந்துள்ளது. வழக்கமாக, பண்ணைகளில், இரண்டு நாள் முட்டை இருப்பு வைக்கப்பட்டிருப்பது வழக்கம். இதற்கிடையில், ஆந்திரா மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலையை குறைத்துள்ளனர். நாமக்கல் மண்டலத்தில் விலையை குறைக்காவிட்டால், நமது முட்டைகள் விற்பனையின்றி தேக்கம் அடைந்துவிடும். மேலும், சரிவு காரணமாக பண்ணைகளிலும், முட்டைகள் தேக்கம் அடைந்துவிடக்கூடாது என்பதற்காகவும், கொள்முதல் விலையை குறைக்க வேண்டிய நிலைக்கு பண்ணையாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

Updated On: 24 April 2024 3:00 AM GMT

Related News

Latest News

  1. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. வீடியோ
    🔴LIVE : Savukku Shankar கைது | சீமான் செய்தியாளர் சந்திப்பு | #seeman...
  5. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  6. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  8. கல்வி
    தமிழ்நாடு பிளஸ்-2 ரிசல்ட்! மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
  9. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!
  10. கல்வி
    12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! திருப்பூர் மாவட்டம் முதலிடம்