/* */

ஈரோடு வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராவுடன் இணைத்திருந்த தொலைக்காட்சி பழுது

Erode news- ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராவுடன் இணைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சி பழுதானது.

HIGHLIGHTS

ஈரோடு வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராவுடன் இணைத்திருந்த தொலைக்காட்சி பழுது
X

Erode news- வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Erode news, Erode news today- ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் சிசிடிவி கேமராவுடன் இணைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சி பழுதானது.

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையமான சித்தோட்டில் உள்ள ஈரோடு அரசினர் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இங்கு 6 ஸ்ட்ராங் ரூம்கள் அமைக்கப்பட்டு 3 அடுக்கு பாதுகாப்புடன் 221 சிசிடிவி கேமரா அமைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் மையம் இயங்கி வருகிறது.

நேற்று ஈரோடு மேற்கு சட்டமன்றத் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம் அறைக்கு வெளியில் பொருத்தப்பட்டிருந்த ஒரு சிசிடிவி கேமரா பழுது ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து, 1 மணி நேரத்தில் தொழில்நுட்ப வல்லுநர்கள் பழுதான சிசிடிவி கேமராவை மாற்றி சரி செய்தனர்.

இந்நிலையில், 2வது நாளாக இன்று காலை ஈரோடு வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ள நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதி வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையின் சிசிடிவி கேமரா திடீரென்று பழுது ஏற்பட்டது. இதனால், சிசிடிவி கேமராக்களை கண்காணிக்க அரசியல் கட்சி வேட்பாளர்களின் முகவர்களுக்கு பொருத்தப்பட்டுள்ள தொலைக்காட்சி பழுது ஏற்பட்டது.

இதனையடுத்து, தொழில்நுட்ப வல்லுநர்கள் சிசிடிவி காட்சியின் தொலைக்காட்சி பழுதை சில நிமிடங்களில் சரி செய்தனர். அதிக வெப்பம் மற்றும் உயர் மின் அழுத்தம் காரணமாக சிசிடிவி கேமிரா ஒயர்கள் கருகியதால் பழுது ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூம் கேமரா பழுதான நிலையில், 2வது நாளாக இன்று சிசிடிவி காட்சியின் தொலைக்காட்சி பழுதானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 30 April 2024 4:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?