/* */

தென்காசியில் வெயிலின் கொடுமையை சமாளிக்க வித்தியாசமாக யோசித்த ஆட்டோ ஓட்டுநர்

தென்காசியில் வெயிலின் கொடுமையை சமாளிக்க ஆட்டோ ஓட்டுநர் தனது ஆட்டோவின் மேல் பகுதியில் தென்னங்கீற்று கட்டி உள்ளார்.

HIGHLIGHTS

தென்காசியில் வெயிலின் கொடுமையை சமாளிக்க வித்தியாசமாக யோசித்த ஆட்டோ ஓட்டுநர்
X

வெயில் கொடுமை தாங்க முடியாமல் இருப்பதால் ஆட்டோ மீது  தென்னங்கீற்று  கட்டி வைத்த ஆட்டோ ஓட்டுனர்.

வெயிலின் கொடுமை சமாளிக்க தென்காசியில் வித்தியாசமாக யோசித்த ஆட்டோ ஓட்டுநர் தனது ஆட்டோவின் மேல் பகுதியில் தென்னங்கீற்று கட்டி வைத்துள்ளார்.

தமிழ்நாட்டில் வரலாறு காணாத வகையில் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.பல்வேறு மாவட்டங்களில் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாளை அக்கினி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் தொடங்க உள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சிகள் சமூக அமைப்புகள் , பல்வேறு தரப்பினர் தண்ணீர் மோர் பந்தல் அமைத்து பொதுமக்களுக்கு சேவை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் 102 டிகிரி வெப்பத்தின் தாக்கம் இருந்து வருகிறது. வெப்பத்தை சமாளிக்கும் வகையிலும், தனது ஆட்டோவில் பயணிக்கும் பயணிகளை பாதுகாக்கும் வகையில் தென்காசி அருகே உள்ள குத்துக்கல் வலசையை சேர்ந்த ராஜசேகர் என்கிற ஆட்டோ உரிமையாளர் தனது ஆட்டோவின் மேல் பகுதியில் தென்னை ஓலையிலான இரட்டை தட்டி கட்டி ஆட்டோவின் மேல் பகுதியில் அமைத்து வெயிலின் தாக்கம் ஆட்டோவில் பயணிக்கும் பயணிகளை தாக்கக் கூடாது என்பதற்காக செய்துள்ள செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளதுடன், ராஜசேகரின் ஆட்டோவிற்கு பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பும் கிடைத்துள்ளது.

வெயில் தாக்கம் ஒரு மனிதனை எப்படி எல்லாம் யோசிக்க வைக்கிறது என்று பல கூறி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 3 May 2024 10:19 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?