/* */

கோடை வெப்பம் சமாளிக்க நுங்கு, இளநீர், தர்பூசணி கடைகளை நாடிய பொதுமக்கள்

குமாரபாளையத்தில் கோடை வெப்பம் சமாளிக்க நுங்கு, இளநீர், தர்பூசணி கடைகளில் பொதுமக்கள் திரண்டு வருகின்றனர்.

HIGHLIGHTS

கோடை வெப்பம் சமாளிக்க நுங்கு, இளநீர், தர்பூசணி கடைகளை நாடிய பொதுமக்கள்
X

வெயிலின் தாக்கம் சமாளிக்க குமாரபாளையம் கரும்பு சாறு, நுங்கு மற்றும் பழக்கடைகளில் கடைகளில் பொதுமக்கள் திரண்டனர்.

குமாரபாளையத்தில் கோடை வெப்பம் சமாளிக்க நுங்கு, இளநீர், தர்பூசணி கடைகளில் பொதுமக்கள் திரண்டு வருகின்றனர்.

குமாரபாளையம் மற்றும் சுற்றுப்பகுதியில் பல நாட்களாக வெயில் வெளுத்து வாங்கி வருகிறது. அரசியல்வாதிகள் கடும் வெயிலையும் பொருட்படுத்தாது தீவிர பிரச்சாரம் செய்து வந்தனர். கடும் வெயில் நேரத்திலும் கட்சி தலைவர்கள் சளைக்காமல் பிரச்சாரம் செய்தனர். கட்சி தொண்டர்கள், மகளிரணியினர் வீதி, வீதியாக கொடிகளை பிடித்தவாறு சென்று ஆதரவு திரட்டினர்.

மேலும் வருவாய்த்துறையினர், ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி வழங்குதல், ஓட்டுச்சாவடிகளை தயார் நிலையில் வைத்திருத்தல், ஓட்டுப்பதிவு மெசின்கள் எடுத்து வந்து பாதுக்காப்பாக வைத்திருத்தல், சம்பந்தபட்ட ஓட்டுச்சாவடி அலுவலர்கள் வசம் மெசின்களை ஒப்படைத்தல், ஓட்டுச்சாவடி எல்லையில் கோடிட்டு வைத்தல், உள்ளிட்ட பல பணிகளை வெயிலின் தாக்கத்தால் சளைக்காமல் செய்தனர். டி.ஐ.ஜி, எஸ்.பி., டி.எஸ்.பி. உள்ளிட்ட போலீசாரும் பாதுகாப்பு பணிகள் மேற்கொண்டனர்.

கடும்கோடை வெப்பத்தில் அனைத்து தரப்பினரும் களைப்பு நீங்கிட, இளநீர், தர்பூசணி, கரும்பு சாறு, பழச்சாறு, உள்ளிட்டவற்றவற்றை விற்பனை செய்யும் கடைகளில் திரண்டனர். இளநீர், பழங்கள் விலை அதிகம் என்பதால், விலை குறைவான கரும்பு சாறு கடைகளுக்கு பொதுமக்கள் அதிகம் வந்துகொண்டுள்ளனர். வழக்கமாக இருந்த கரும்பு சாறு கடைகளை விட தற்போது எண்ணிக்கையில் அதிகம் காணப்படுகிறது.

இது குறித்து கரும்பு சாறு கடை வியாபாரிகள் கூறும்போது இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகம் என்பதால், விலை குறைவான கரும்பு சாறு கடைகளுக்கு அதிகம் வருகின்றனர் என்றனர்.

இந்தாண்டு நுங்கு கடைகளை காண முடியாத நிலை இருந்த நிலையில், தற்போது ஆங்காங்கே ஓரிரு நுங்கு கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு சுளை ஐந்து ரூபாய் என விற்கப்படுகிறது என பொதுமக்கள் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்தனர்.

Updated On: 28 April 2024 11:48 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  3. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  6. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  7. கோவை மாநகர்
    கோவை மாநகரில் ஒரு மணி நேரம் கனமழை ; மக்கள் மகிழ்ச்சி
  8. நாமக்கல்
    வெண்ணந்தூரில் தனி செயலாளரின் தந்தையின் படத்திற்கு முதல்வர் மாலை...
  9. லைஃப்ஸ்டைல்
    கிரடிட் கார்டு பயன்பாட்டில் இவ்வளவு நன்மைகளா?
  10. லைஃப்ஸ்டைல்
    தலைமுடி வளர்ச்சிக்கு இனிமேல் முட்டையை பயன்படுத்துங்க!