பள்ளி மாணவர்களுக்கு போக்குவரத்து ஆய்வாளர் விழிப்புணர்வு பயிற்சி
பள்ளி மாணவ மாணவிகளுக்கு போக்குவரத்து விதிமுறைகளை குறித்து விழிப்புணர்வு பயிற்சியளித்த போக்குவரத்து காவல் ஆய்வாளர்
பள்ளி மாணவ மாணவிகளுக்கு போக்குவரத்து விதிமுறைகளை குறித்து போக்குவரத்து காவல் ஆய்வாளர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்
மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் பூர்ண கிருஷ்ணன், திருப்பரங்குன்றம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர் மாணவிகளுக்கு இடையே போக்குவரத்து விதிகள் குறித்தும் , 18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் வாகனத்தை இயக்கக் கூடாது எனவும், அது குறித்து ஏற்படும் விளைவுகள் குறித்தும் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டார் .
மேலும், பள்ளி மாணவ மாணவியரிடம் பேசுகையில்: பெற்றோர்கள் இருசக்கர வாகனத்தில் உடன் செல்லும் பொழுது கட்டாயம் தலைக்கவசம் அணிந்து இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.எனவும், அதை உங்கள் தந்தைக்கும் நீங்கள் சொல்லித் தர வேண்டும் எனவும், காரில் பயணம் செய்யும்பொழுது கட்டாயமாக சீட் பெல்ட் அணிந்து செல்ல வேண்டும் எனவும், பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை கூறினார். போக்குவரத்து விதிகள் குறித்து போக்குவரத்து விதிகள் குறித்து, பல்வேறு பள்ளி மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.
இது பள்ளி மாணவர் இடையே மிகுந்த வரவேற்பு பெற்றது. பள்ளி மாணவர் ஒருவர் கூறுகையில்: காவல்துறை ஆய்வாளர் எங்களிடம் கூறுகையில் எங்கள் தந்தை இரு சக்கர வாகனத்தில் இனி எடுக்கும் பொழுது கட்டாயமாக ஹெல்மெட் அணிந்தே பயணம் செய்ய வேண்டும் என சொல்லுவேன் என, தெரிவித்தார். இவரது ,பிரச்சாரமானது பள்ளி மாணவர்கள் இடையே மிகுந்த வரவேற்பை பெற்றது .
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu