/* */

டிக்கெட் முன்பதிவு செய்த ரயிலில் தொந்தரவா..? 139 பேசும்..!

முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டியில் டிக்கெட் எடுக்காமல் அல்லது முன்பதிவு செய்யாத டிக்கெட் உள்ளவர்கள் ஏறி பயணிகளுக்கு இடையூறு செய்வதற்கு விடிவு கிடைத்துள்ளது.

HIGHLIGHTS

டிக்கெட் முன்பதிவு செய்த ரயிலில் தொந்தரவா..? 139 பேசும்..!
X

முன்பதிவு செய்யப்பட்ட ஏசி ரயில்பெட்டி (கோப்பு படம்)

Ticketless Passengers Occupy Reservation Compartment

முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டியில் டிக்கெட் இல்லாமல் பலர் ஏறி சீட்டுகளை ஆக்கிரமிப்பு செய்யும் சம்பவங்கள் நாடுமுழுவதும் அரங்கேறி வருகிறது. அது மட்டும் அல்லாமல் பயணிகளுக்கு தொந்தரவு செய்யும் அவளை நிலையும் தொடர்கிறது. இதைப்போன்ற சம்பவங்களை சுட்டிக்காட்டி பயணி ஒருவர் தனது சமூகவலைதள பக்கங்களில் பகிர்ந்த சம்பவத்திற்கு ரயில்வே நிர்வாகம் பதில் அளித்துள்ளது.

Ticketless Passengers Occupy Reservation Compartment

இதைப்போன்ற பிரச்சனைகளை ரயில் பயணிகள் சந்தித்தால் என்ன செய்யணும்? இந்த சூழ்நிலையில் எப்படி உதவிகளை பெறலாம் என்றும் தெரிவித்துள்ளது.

இது குறித்த விரிவான செய்தியை படிக்கலாம் வாங்க.

இந்தியா முழுவதும் ரயில் போக்குவரத்து என்பது மிக முக்கியமான அத்தியாவசிய போக்குவரத்துகளில் ஒன்றாக இருந்து வருகிறது. நாடு முழுவதும் தினம் தோறும் ஆயிரக்கணக்கான ரயில்கள் பயணம் செய்து வருகின்றன. அதில் லட்சக்கணக்கான பயணிகள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பயணம் செய்து வருகிறார்கள். இந்தியாவிலேயே மிகக் குறைந்த விலையில் நீண்ட தூரம் பயணம் செய்ய வசதியாக இருக்கும் ஒரே போக்குவரத்து ரயில் வசதி மட்டும் தான்.

இந்தியா முழுவதும் ரயில்கள் அதிகமாக இயக்கப்பட்டாலும் பெரும்பாலும் இரவு நேரங்களிலேயே நீண்ட தூர ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்களில் டிக்கெட் குறைவாக இருப்பதால் அதிக எண்ணிக்கையிலான பயணிகள் இந்த ரயில்களில் பயணம் செய்ய திட்டமிட்டு வருகிறார்கள். அதற்காகவே பயணங்களை முன்கூட்டியே திட்டமிட்டு ரயில்களில் முன்பதிவு செய்கின்றனர்.

Ticketless Passengers Occupy Reservation Compartment


இந்தியாவில் ரயில் பயணத்தில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகள் தனியாகவும், முன்பதிவு செய்யப்படாத பெட்டி என இரண்டு பிரிவுகளாக பெட்டிகள் உள்ளன.

இந்நிலையில் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகள் அதிக அளவில் விற்பனையானால் அந்த டிக்கெட்டுகளை எடுத்த பல பயணிகள் முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பெட்டிகளில் ஏறி பயணம் செய்கிறார்கள். இதனால் முன்பதிவு செய்து பயணம் செய்யும் பயணிகளுக்கு மிகப் பெரிய தொந்தரவாக இருக்கிறது. இது இந்தியா முழுவதும் இருக்கும் பெரும் பிரச்சினையாக இருந்து வருகிறது.

குறிப்பாக தமிழகத்திலிருந்து வடமாநிலங்களுக்கு பயணிக்கும் ரயில்களில் இப்படியான பிரச்சனைகளை பல பயணிகள் சந்தித்து வருகிறார்கள். படுக்கை வசதி கொண்ட பெட்டி மட்டுமல்லாமல் ஏசி பெட்டிகளிலும் இப்படியாக முன் பதிவு செய்யப்படாத டிக்கெட்கள் எடுத்தோ அல்லது டிக்கெட் எடுக்காமலோ பல பயணம் செய்து வருகிறார்கள்.

Ticketless Passengers Occupy Reservation Compartment

இதனால் முன்பதிவு செய்த பயணிகளுக்கு பெரும் தொந்தரவாக இருக்கிறது. இப்படியான இக்கட்டான ஊழலில் சிக்கிய ஒருவர் தற்போது இதை சமூக ஊடகங்களில் கொண்டுசென்று அதற்கான தீர்வையும் பெற்றுள்ளார். எக்ஸ் தள பக்கத்தில் பாபு பையா என்பவர் சமீபத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவின்படி அவர் குஜராத் மாநிலம் புஜ் பகுதியில் இருந்து சாலிமர் வரை பயணிக்கும் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்துள்ளார்.


அவர் அந்த ரயிலில் உள்ள எஸ்5 கோச்சில் பயணம் செய்துள்ளார். அந்த கோச்சில் முன்பதிவு டிக்கெட் இல்லாத பயணிகள் பலர் ஏறி பயணம் செய்துள்ளனர். இதனால் அந்த பெட்டியில் பயணித்த அனைவருக்கும் தொந்தரவு ஏற்பட்டுள்ளது. இதை புகைப்படம் எடுத்து அவர் பதிவு செய்து அந்த பதிவில் ரயில்வே நிர்வாகம் மற்றும் ரயில்வே துறை அமைச்சரை டேக் செய்து பதிவிட்டார்.

இப்படியாக தினம் தோறும் பல்வேறு ரயில்களில் முன்பதிவு பெட்டிகளில் டிக்கெட் இல்லாத பலர் பயணம் செய்து வருகின்றனர். அவர்கள் முன்பதிவு செய்த பயணிகளுக்கு தொந்தரவு தருகின்றனர் என்ற பேச்சு எழுந்து வருகிறது. இதற்கு தீர்வு கிடைக்காமல் பலர் தவித்து வந்தனர். இந்த நிலையில், பாபு பையா பதிவு செய்த இந்த பதிவிற்கு ரயில்வே நிர்வாகம் பதில் அளித்துள்ளது.

Ticketless Passengers Occupy Reservation Compartment

இந்த பதிவில் குறிப்பிட்ட சம்பவம் குறித்து நடவடிக்கை எடுப்பதற்காக புகார் அளித்தவரின் செல்போன் நம்பரை கேட்டு அவருக்கு பதில் தந்ததுடன் இது குறித்த புகார்களை தெரிவிப்பதற்காக 139 என்ற எண்ணிற்கு டயல் செய்யலாம், அல்லது ரயில் மதாத் என்ற இணையதளத்தில் இது குறித்து புகார் செய்யலாம். அவ்வாறு புகார் செய்தல் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 28 March 2024 2:18 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  2. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  3. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?
  4. தாராபுரம்
    குட்டையாக மாறிய உப்பாறு அணை; விவசாயிகள் வேதனை
  5. லைஃப்ஸ்டைல்
    ஏழு எளிய வழிகளில் உடல் கொழுப்பை கரைக்கலாம் - எப்படீன்னு...
  6. சினிமா
    ‘எப்போதும் கொண்டாடப்பட வேண்டியவர் கங்கை அமரன்’
  7. திருப்பூர் மாநகர்
    பின்னலாடைத் துறையில் வேலை வாய்ப்பு: ஏற்றுமதியாளா்கள் சங்கத்துக்கு...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை இயந்திரங்கள், உதிரிபாகங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க...
  9. உடுமலைப்பேட்டை
    கடும் வறட்சியால் தவிப்பு; உடுமலை வனப் பகுதியில் குடிநீருக்காக அலையும்...
  10. லைஃப்ஸ்டைல்
    உங்க உடம்புல இந்த பிரச்னை இருக்குதா? அப்போ மாதுளம் பழம்